விராட் கோஹ்லி வெற்றிபெற அதிர்ஷ்டம் மற்றும் டோனியே காரணம்...

Report Print Abisha in கிரிக்கெட்

பாகிஸ்தான் வீரர் அகமது ஷேசாத் விராட்கோஹ்லி வெற்றிபெற அதிஷ்டம் மற்றும் டோனியே காரணம் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியா அணியில் தலைசிறந்த வீரராக இருக்கும் விராட் கோஹ்லியுடன் ஒப்பிட்டு பேசப்பட்டவர்களில் பாகிஸ்தான் அணியின் அகமது ஷேசாத்தும் ஒருவர்.

அறிமுகமான காலத்தில் அவரது பேட்டிங் திறமை அப்படி பேசவைத்தது. ஆனால் காலம் செல்லசெல்ல விராட் கோஹ்லி தலைசிறந்த வீரராக மாறிவிட்டார். 28 வயதாகும் அகமது ஷேசாத்தின் கிரிக்கெட் வாழ்க்கை சரிவை சந்தித்தது.

இதுகுறித்து அகமது ஷேசாத் கூறுகையில் ‘‘சிறந்த வீரருடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நெருக்கடியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அவர்களுடைய பின்னணி தெரியாமல் நாம் இருவரை ஒப்பிட முனைகிறோம்.

எந்வொரு வீரரும் வெற்றிபெற அவர்களுக்கு பயிற்சியாளர், கேப்டன், கிரிக்கெட் போர்டு ஆகியவற்றின் ஆதரவு தேவைப்படுகிறது. ஒரு வீரரோ, வீராங்கனையோ நம்பிக்கை பெற இது அவசியம்.

விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், பாபர் அசாம் ஆகியோரின் பின்னணியை பார்த்தால் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆனால், எம்.எஸ் டோனி எனக்கு ஆதரவாக இருந்தார் என்று விராட் கோஹ்லியை சொல்லியிருக்கிறார். ரோகித் சர்மாவுக்கும் இது நிலைதான். இருவர் மீதும் எம்எஸ் டோனி நம்பிக்கை வைத்திருந்தார்’’என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்