எச்சில் பயன்படுத்த தடைவிதித்தால் பந்து வீச்சாளர்களுக்கு கடினம்! கவுதம் கம்பீர்

Report Print Abisha in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியில் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் பந்து வீச்சாளர்களுக்கு மிகக்கடினம் என்று கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒரு தொற்று நோய் என்பதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் அனைவரும் உள்ளனர். அதேபோல் பொதுவெளியில் எச்சில் துப்பவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பந்து வீச்சாளர்கள் தங்கள் வியர்வை மற்றும் எச்சிலை கொண்டுதான் பந்தை பளபளக்க செய்கின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் ‘எச்சில்’ பயன்படுத்தினால் மற்ற வீரர்களுக்கு அதன்மூலம் நோய் பரவும் அபாயம் உள்ளதால், பயன்படுத்த ஐசிசி தடைவிதிக்க பரிந்துரை செய்துள்ளது.

‘எச்சில்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டால் அது பந்து வீச்சாளர்களுக்கு கடினமான விஷயம் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவுதம் கம்பீர் கூறுகையில் ‘‘எச்சில் பயன்படுத்த தடைவிதிப்பது பந்து வீச்சாளர்களுக்கு கடுமையான விஷயம். ஐசிசி அதற்கான மாற்று முறையை கொண்டு வர இருக்கிறது. பந்தை பளபளப்பாக்க முடியவில்லை என்றால், பந்துக்கும் பேட்டிற்கும் இடையில் சரியான போட்டியாக இருக்கும் என நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்