டோனியின் பேச்சை கேட்காமல் விளையாடினேன்! 7 ஆண்டுகளுக்கு பின் இரட்டை சதம் ரகசியத்தை கூறிய ரோகித்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா, இரட்டை சதம் அடிக்கும் போது, டோனியின் அறிவுரையை நிராகரித்தேன் என்று 7 வருடங்களுக்கு பின் கூறியுள்ளார்.

தற்போது ஊரடங்கு அமுலில் உள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் பலரும், தங்களுடைய இன்ஸ்டாகிராமில் சக வீரர்களுடன் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுடன், துவக்க வீரர் ரோகித்சர்மா உரையாடினார். அப்போது, கடந்த 2013-ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தது குறித்து நினைவுகூர்ந்தார்.

அதில், நான் அன்றையப் போட்டியில் இரட்டைச் சதம் அடிப்பேன் என நினைக்கவில்லை. அந்தப் போட்டியில் ஷிகர் தவான், கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

பின்பு தொடக்க வீரரான நானும் சுரேஷ் ரெய்னாவும் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தோம். ரெய்னா ஆட்டமிழந்ததும் டோனி வந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினோம்.

அபோது டோனி என்னிடம், அடிக்கடி வந்து நீ ஆரம்பத்தில் இருந்து விளையாடி வருகிறாய். இதனால் நீ கடைசி வரை இருக்க வேண்டும். உன்னால் எந்த பந்தையும் விளாச முடியும், நீ நிலைத்து நின்று ஆட வேண்டும்.

நான் அடித்து ஆடும் பொறுப்பை எடுத்து கொள்கிறேன் என்று கூறினார். ஆனால் நானோ அவர் பேச்சை கேட்காமல், கிடைத்த பந்துகளை எல்லாம் அடித்தேன். அவர் சொன்னது போன்றே கடைசி வரை ஆட முடியாமல் 48-வது ஓவரிலே பெளவிலியன் திரும்பியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்