இலங்கையின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டுவது இடை நிறுத்தம்! கூட்டத்திற்கு பின் முடிவு

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கையில் கட்டப்படவிருந்த மிகப் பெரிய கிரிக்கெட் மைதானம் இடைநிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையில் தலைநகர் கொழும்புவின் Homagama நகரில் நாட்டின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் கட்டுவதற்கான திட்டங்கள் சமீபத்தில் வெளியானது.

26 ஏக்கர் பரப்பளவில் 60,000 அமெரிக்க டொலர் மதிப்பில் 40 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டப்படவிருந்தது. ஆனால் இந்த திட்டத்தால், இலங்கை அரசும், இலங்கை கிரிக்கெட் வாரியமும் கடும் விமர்சனத்தை சந்தித்தது.

இந்நிலையில், இந்த மைதானம் கட்டுவது குறித்து இன்று பிரதமர் மகிந்த ராசபக்ச மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர், இந்த திட்டம் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், பள்ளி கிரிக்கெட் மற்றும் அரங்கங்களை உருவாக்குவதற்கான நிதியை இயக்கும் படி பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்