வேண்டுமென்றே ரன் அவுட்டில் மாட்டி விடும் அவுஸ்திரேலிய வீரர்! பல வருடங்கள் கழித்து பேசிய ஷேன் வார்னே

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் தலைவரான ஸ்டீவ் வாக் தான் துடுப்பெடுத்தாடிய போது, சக வீரர்களை பல முறை ரன் அவுட் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

உலகின் தலை சிறந்த கிரிக்கெட் தலைவர்களின் வரிசையில் ஸ்டீவ் வாக்கும் இருக்கிறார்.

இந்நிலையில் பிரபல ஆங்கில தளமான ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் அவுஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் தான் துடுப்பெடுத்தாடிய போது மொத்தம் 104 ரன் அவுட் சந்தர்ப்பங்களில் பங்காற்றியுள்ளார்.

இதில் 31 முறைதான் இவர் ரன் அவுட் ஆகியுள்ளார், மீதி 73 முறை எதிர்த்தாற்போல் இருக்கும் சகவீரர்தான் ரன் அவுட் ஆகியிருக்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.

இதை ஆதரிக்கும் வகையில் அந்தணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேவும், ஸ்டீவ் வாக்கை விமர்சித்துள்ளார்.

அதில், என்னுடன் விளையாடிய வீரர்களில் ஸ்டீவ் வாகை விடவும் சுயநலவாதியை நான் கண்டதில்லை. இந்த ரன் அவுட் புள்ளி விவரம் அதை உறுதி செய்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டீவ் வாகை ஷேன் வார்ன் இப்போதல்ல எப்போதுமே கடுமையாகத் தாக்கி பேசிவருவது வழக்கம், அணியில் ஸ்லெட்ஜிங்கை அசிங்கமாக மாற்றியது ஸ்டீவ் வாக் தான் என்று ஷேன் வார்னே கூறியுள்ளார்.

இருவருக்கும் ஒத்து வராது, ஏதோ முக்கியமான போட்டியில் தன்னை உட்கார வைத்தது தொடர்பாக இருவருக்கும் சண்டை ஆரம்பமானது.

இந்நிலையில் இந்த கருத்துக்கு ஸ்டீவ் வாஹ் பதிலளிக்கையில், மக்கள் இதனை வழிவழிப்பகையாகக் கருதுகிறார்கள்.

அப்படியல்ல இது இரு நபர்களுக்கு இடையிலான பகையே. எனவே நான் இதில் கொண்டுவரப்படவில்லை. எனவே இது ஒரு நபர் பற்றியதாகும். அவரது கருத்து அவரைத்தான் பிரதிபலிக்கிறது. எனக்கும் அவரது குற்றச்சாட்டுக்கும் தொடர்பில்லை, இவ்வளவுதான் என்னால் கூற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்