கொரோனா பாதிப்பு பிரச்சனையை ஓரம் கட்டிவிட்டு போட்டி? பிசிசிஐ-ன் திட்டம்

Report Print Abisha in கிரிக்கெட்

கொரோனா பாதிப்பு பிரச்சனையை ஓரட்கட்டி விட்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான குறுந்தொடரை நடத்த பிசிசிஐ பரிசீலித்து வருகிறது.

கடந்த ஒரு மாதமாக இந்த பேச்சுவார்த்கைகள் இருநாட்டு வாரியங்களுக்கும் இடையே நடைபெற்று வருகிறது. 3 டி20 போட்டிகள் கொண்ட தொடராக இது இருக்கலாம்

ஆனால், அரசு அனுமதி அளித்தால்தான் வெளிநாட்டுப் பயணம் கிரிக்கெட் எல்லாம் சாத்தியமாகும்.

இருநாடுகளுக்கும் ஆன சமீபத்திய ஒரு நாள் தொடர் மார்ச்சில் ரத்து செய்யப்பட்டதை ஈடுகட்ட இந்த டி20 தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இருவாரியங்களுக்கும் பொது ஒளிபரப்பு நிறுவனம் இருப்பதால் தொடரை நடத்துவதில் சிக்கல் இருக்காது என்றும் பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ மருத்துவ குழுவுடன் பரிசீலித்து இது குறித்து ஜூன்மாத்தில் முடிவு செய்ய உள்ளது.

இந்த தென் ஆப்பிரிக்கா, இந்தியா தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்