டோனிக்கு பதில் இவர் விக்கெட் கீப்பரா? குறுகிய கால தீர்வு தான்! பார்த்தீவ் பட்டேல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியில் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்துவது குறுகிய கால தீர்வு தான் என்று பார்த்தீவ் பட்டேல் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின், டோனிக்கு விளையாடாத காரணத்தினால், ஒரு சிறந்த விக்கெட் கீப்பரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தேடி வருகிறது.

ஆனால் டோனி போன்று ஒரு வீரரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. இதனால் இளம் வீரர் ரிஷப் பாண்டை தயார் செய்து வருகிறது.

அவருக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டும், ரிஷப் சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால், தற்போது பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கே.எல்.ராகுலை விக்கெட் கீப்பராக இந்திய அணி பயன்படுத்தி வருகிறது.

பேட்டிங்கிலும், கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், டி20 உலக கோப்பை தொடரில் கே.எல் ராகுலை விக்கெட் கீப்பராக தேர்வு செய்ய இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரில் யாரை ஒயிட் பால் கிரிக்கெட்டுக்கு விக்கெட் கீப்பராக தேர்வு செய்யலாம் என இந்திய அணிக்கு விக்கெட் கீப்பராக இருந்த பார்தீவ் பட்டேலிடம் கேட்ட போது, கேஎல் ராகுல் குறுகிய கால தீர்வு என்று கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், நீங்கள் உலக கோப்பையை பற்றி சிந்தித்தால் கே.எல் ராகுல் குறுகிய கால தீர்வுகாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஆனால் ரிஷப் பண்ட் அதில், நிச்சயமாக இருப்பார். நான் ஒவ்வொரு முறையும் ரிஷப் பண்டை சந்திக்கும்போது, உனக்குள் திறமை இருப்பதாக மக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

உங்களிடம் திறமை இல்லை என்றால் மக்கள் ஒருபோதும் உங்களை பற்றி பேசமாட்டார்கள். அகவே, இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளேன். சில நேரங்களில் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடும்போது, மீண்டும் பார்முக்கு வர முடியும் என்று ரிஷப் பாண்டை பற்றி தெரிவித்துள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்