இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஜூன் 1ம் திகதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் பயிற்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்து நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது பல நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளதால் மீண்டும் மைதானங்களில் பயிற்சியை தொடங்க தயாராகி வருகின்றன.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 1ம் திகதியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர்களுடன் சிறிய குழுவை கொண்டு பயிற்சியை தொடங்கும்வோம் என்று, அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்

அவர் கூறுகையில், கடந்த வாரம் விரைவான ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினோம். அப்போது மீண்டும் பயிற்சியை மேற்கொள்வது குறித்து பேசப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் சாதகமான பதில்களை பெற்ற பின்னர், கேப்டன் மற்றும் என்னுடைய சப்போர்ட் ஸ்டாஃப்களுடன் திட்டத்தை பயிற்சிக்கான திட்டத்தை முன்மொழிவேன்.

முதலில் சிறிய குழுவாக பயிற்சியை தொடங்குவோம். வேகப்பந்து வீச்சாளர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம். ஏனென்றால், ஒருமுறை பந்து வீசிய பின்னர், மீண்டும் பந்து வீச அவர்கள் அதிகமான நேரத்தை எடுத்துக் கொள்வார்கள் என கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் உள்ளிட்ட கிரிக்கெட் போட்டிகள் ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை சுற்றுப் பயணத்தையும் பிசிசிஐ ரத்து செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு உடனடியாக கடிதம் எழுதியது.

அதற்கு பதிலளித்த பிசிசிஐ பொருளாளர் அருண் துமால், இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்வது அரசாங்கத்தின் கையில்தான் இருக்கிறது.

கிரிக்கெட் வீரர்களுக்கு போதிய பாதுகாப்புகளைக் கொடுத்தால் நாங்கள் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்