டோனியின் புத்திசாலிதனத்தால் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை வென்றோம்! ரகசியத்தை உடைத்த உத்தப்பா

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியதன் ரகசியம் குறித்து முதல் முறையாக இந்திய அணி வீரர் உத்தப்பா கூறியுள்ளார்.

கடந்த 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் இந்த தொடரின் லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி டிராவில் முடிந்தது. இப்போது போன்று அப்போது சூப்பர் ஓவர் கிடையாது.

அப்போது ஐந்து பேர் பந்து வீச வேண்டும், இதில் எந்த அணி, அதிகமாக போல்டாக்குகிறதோ, அந்தணியே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

அதன் படி, இந்தியா மூன்று முறை போல்டாக்கியது, ஆனால் பாகிஸ்தான் அணி மூன்று முறையும் போல்டாக்காததால், தோல்வியடைந்தது. இது எப்படி இந்தியாவால் சாத்தியமானது என்பது குறித்து அப்போது இந்திய அணிக்கான உலகக்கோப்பை தொடரில் விளையாடிய உத்தப்பா இப்போது கூறியுள்ளார்.

அதில், பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் காம்ரான் அக்மல், வழக்கமாக விக்கெட் கீப்பிங் செய்யும் இடத்திலேயே நின்றார். ஆனால் டோனி, பவுலர்கள் ஸ்டம்பில் அடிப்பதற்கு வசதியாக, ஸ்டம்பிற்கு பின்னால் வலதுபுறமாக நின்றார்.

டோனியை நோக்கி பந்தை வீச வேண்டும் என்பதுதான் திட்டம். நாங்கள் சரியாக வீசினோம். பந்தும் ஸ்டம்பில் பட்டது.

ஆனால் காம்ரான் அக்மல் வழக்கமான விக்கெட் கீப்பிங் பாணியை பின்பற்றினார். டோனியின் உத்தியால் தான் நமது வீரர்களுக்கு அது சாத்தியமானது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்