டோனியைப் பற்றி தேவையில்லாமல் சமூகவலைத்தளங்களில் டிரண்டான தகவல்! கடுப்பான மனைவி ஷாக்சி

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் அதிரடி வீரர் டோனி ஓய்வு குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல் ஒன்று வைரலானதால், அவரின் மனைவியான ஷாக்சி இது வதந்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி, எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.

வரும் ஐபிஎல் தொடரில் டோனியின் திறமையை பார்த்தே அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடரும் நடைபெறாத காரணத்தினால், டோனியின் கிரிக்கெட் வாழ்க்கை இனி அவ்வளவு தான் என்று கூறப்பட்டது.

இதற்கிடையில் நேற்று நேற்று திடீரென #DhoniRetires என்ற ஹேஷ்டேக் சமூகவலைதளத்தில் அதிகளவு ட்ரென்டிங் ஆகியது.

இதனை கண்ட டோனியின் மனைவி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், இந்த பொய்யான தகவல் எதிரான தனது கருத்தினை கோபமாக பதிவிட்டுள்ளார்.

மேலும், இது வெறும் வதந்தி தான். ஊரடங்கு காலத்தில் மக்களின் மனநிலை நிலையில்லாததாக மாறியுள்ளதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவை பதிவிட்ட சில மணி நேரத்திலேயே ஷாக்சி அதனை ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்