இலங்கை துடுப்பாட்டத்தின் எதிர்காலம் யார்? ஜாம்பவான் சங்கக்கார புகழாரம் சூட்டிய வீரர்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார ஜிம்பாப்வே முன்னாள் கிரிக்கெட் வீரர் பொம்மி ம்பாங்வாவுடன் இன்ஸ்டாகிராம் நேரலை வீடியோ நேர்காணலில் பங்கேற்றார்.

இலங்கையின் துடுப்பாட்ட எதிர்காலம் யார் என்று குமார் சங்கக்காரரிடம் பொம்மி ம்பாங்வா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த சங்கக்கார, இலங்கையில் அணியில் பல வீரர்களை சொல்லாம், என்னை பொறுத்தவரை இப்போதைய வீரர்களில் மிகச் சிறந்தவர் குசால் மெண்டிஸ்.

அவர் அணியில் இருந்த குறுதிய காலத்தில் பல விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

ஆனால், என்னை பொறுத்தவரை குசால் மெண்டிஸ் ஒவ்வொரு முறையும் விளையாடுவதை பார்த்துள்ளேன். சரியாக கையாளுவார் மற்றும் போட்டியில் விளையாடுவது மற்றும் நிலைமை பற்றி சிந்தித்து விளையாடுவார்.

குசால் மெண்டிஸ் உண்மையில் ஒரு சிறந்த வீரர் என குமார் சங்கக்கார புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்