கருப்பரினத்தவருக்காக நீங்கள் சமூக நீதி கேட்க மாட்டீர்களா? ஜார்ஜ் பிளாய்ட் கொலை குறித்து டேரன் சமி வேதனை

Report Print Kavitha in கிரிக்கெட்

அமெரிக்காவில் உள்ள மின்னபொலிஸ் என்ற நகரில் கருப்பின நபரான ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை அந்நாட்டு போலீசார் கழுத்தை காலால் நெரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் காரணமாக அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் மே.25ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் கலவரம் வெடித்தது.

இந்நிலையில் கருப்பரினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் விவகாரம் குறித்து மேற்கிந்திய முன்னாள் கேப்டன் டேரன் சமி “இது மௌனத்துக்கான நேரமல்ல. நிறவெறி, சமூக அநீதிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய காலம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் கிரிக்கெட் சங்கங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“நிறவெறி அமெரிக்காவுடன் முடிவடைவதில்லை, இது உலகம் முழுதும் உள்ளது. என் சகோதரன் தொண்டையில் பூட்ஸ் கால் வீடியோவை பார்த்த பிறகு கிரிக்கெட் உலகம் இன்னும் ஏன் மௌனம் சாதிக்கிறது.

ஐசிசி மற்றும் கிரிக்கெட் வாரியங்கள் என்னைப் போன்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை இன்னுமா உணரவில்லை? எங்களுக்காக, கருப்பரினத்தவருக்காக நீங்கள் சமூக நீதி கேட்க மாட்டீர்களா? சமூக அநீதிகளுக்கு எதிராக பேச மாட்டீர்களா?

இது அமெரிக்கா சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, இது தினப்படி நடக்கிறது. இப்போது மௌனத்துக்கான நேரமல்ல, நான் உங்கள் குரல்களை கேட்க விரும்புகிறேன்” என்று வேதனையுடன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்