மெளன ராகம் இசையோடு டிராக்டர் ஓட்டும் தல தோனி! இணையத்தில வைரலாகும் காணொளி

Report Print Kavitha in கிரிக்கெட்

கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்து இடைநிறுத்தப்பட்டதால் கிரிகெட் வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவழித்து கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொருவரும் தங்களது ஊரடங்கு காலத்தினை எப்படி கழித்து கொண்டு வருகின்றார்கள் என்பதை சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாக பதிவேற்றம் செய்து வருகின்றார்கள்.

அந்தவரிசையில் தல தோனி தான் வாங்கி இருக்கும் புதிய டிராக்டரை ஓட்டி வரும் வீடியோ ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவுக்கு மெளன ராகம் திரைப்படத்தில் வரும் இளையராஜாவின் இசையை கோர்த்து சிஎஸ்கே. 'இளையராஜாவுடன் தல தோனியின் சந்திப்பு'' என அந்த வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது.

தற்போது அந்த வீடியோவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்