கண்டிப்பாக நாங்க நடத்துவோம்... அதுக்கு வாய்ப்பே இல்லை! ஐ.பி.எல் தொடருக்கு செக் வைக்கும் பாகிஸ்தான்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐ.பி.எல் தொடருக்காக, ஆசிய கோப்பை தொடரை ரத்து செய்ய முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அக்டோபர் – நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் அந்த நேரத்தில் ஐபிஎல் 2020 தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்தத் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐ.பி.எல் தொடருக்காக ரத்து செய்யப்படலாம் என்று கூறப்பட்டது.

ஆனால், ஐபிஎல் போட்டிக்குப் பதிலாக ஆசிய கோப்பை ரத்து செய்யப்படும் என்ற யூகத்திற்கு வாய்ப்பே இல்லை. ஆசிய கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ஆசிய கோப்பை திட்டமிட்டபடி நடக்கும். இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 2-ஆம் திகதி திரும்பிவிடும். ஆகவே, செப்டம்பர் அல்லது அக்டோபரில் எங்களால் தொடரை நடத்த முடியும்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவு இல்லை என்பதால் அங்கு நடத்தப்படலாம். அவர்கள் முடியாது என்றால், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எப்போதுமே தயாராக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்