ஆன்லைன் மூலம் இளம் வீரர்களுக்கு பயிற்சியளிக்க போகும் டோனி

Report Print Kavitha in கிரிக்கெட்

கொரோனாவால் ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் 20 ஓவர் உலக கோப்பை நடைபெறுவது சந்தேகமாக இருந்தது.

இந்த நிலையில் ஜூலை 2-ந்தேதி எம்எஸ் டோனி ஆன்லைன் அகாடமியை திறப்பதுடன், இளம் வீரர்களுக்கு பயிற்சி குறித்து கொடுப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயிற்சி மையத்தின் இயக்குனராக தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டேரியல் கல்லினனும் தோனியின் தலைமையின் கீழ் பயிற்சி மையம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆர்கா ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கூறுவதாவது, ‘‘ நாங்கள் இந்த முறையில் ஏற்கனவே 200 பேர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம்.

மேலும் ஜூலை 2-ம் தேதியில் இருந்து டோனியின் தலைமை பொறுப்பில் மற்ற பயிற்சியாளர்கள் வீரர்களுக்கான பாடங்களை வழங்குவார்கள். ’’ என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்