இந்திய அணி கேப்டனாக இருந்த போது டோனி எப்படி பந்துவீச்சாளர்களிடம் நடந்து கொண்டார்? உண்மையை உடைத்த பிரபல வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

டோனி அணித்தலைவராக இருந்த போது பந்துவீச்சாளர்களிடம் எப்படி நடந்து கொண்டார் என் இர்பான் பதான் கூறியுள்ளார்.

35 வயதாகும் இர்பான் பதான், மகேந்திரசிங் டோனி தலைமையிலான இந்தய அணியில் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்று விளையாடியவர்.

கேப்டனாக டோனி எவ்வாறு செயல்பட்டார் என்றும், அவர் பந்து வீச்சாளர்களை எவ்வாறு வழி நடத்தினார் என்றும் சில நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், 2007ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியின் போது பந்து வீச்சாளர்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

எந்தெந்த பேட்ஸ்மன்களுக்கு எவ்வாறு பந்துவீச வேண்டும், எவ்வாறு செயல்பட வேண்டும் என அடிக்கடி பந்து வீச்சாளர்களிடம் கூறிக் கொண்டே இருப்பார். கிட்டதட்ட, பந்துவீச்சாளர்களை முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

ஆனால், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் அவர் நூறு சதவீதம் மாறுதல் அடைந்திருந்தார். பந்து வீச்சாளர்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்காமல், சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்