பிரபல கிரிக்கெட் வீரர் கொரோனா தொற்றுக்கு பலி! வேதனையில் ஆழ்ந்த அவர் மனைவி

Report Print Raju Raju in கிரிக்கெட்

டெல்லி கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் சஞ்சய் தோபல் கொரோனா தொற்றால் தனது 52வது வயதில் உயிரிழந்துள்ளார்.

சஞ்சய் தோபலுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு சஞ்சயின் மறைவு பெரும் வேதனையை கொடுத்துள்ளது.

சஞ்சயின் மூத்த மகன் சித்தாந்த் ராஜஸ்தான் அணிக்காக விளையாடும் ரஞ்சி வீரர், இன்னொரு மகன் ஏகான்ஷ் டெல்லி யு-23 வீரர்.

சஞ்சய் நல்ல மனிதர், பிறருக்கு உதவும் குணமுடையவர் என்று பலரும் இவரைப் பற்றி தெரிவித்துள்ளனர்.

இவருடன் விளையாடிய முன்னாள் டெல்லி கேப்டன் கே.பி. பாஸ்கர் கூறும்போது, எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் இவர் உதவுவார். மிகவும் கலகலப்பான மனிதர், வீரர்கள் விமானத்தில் பயணிக்கும் போது அவர்களுக்கு எந்த ஒரு வசதி குறைவும் ஏற்படாதவாறு பார்த்துப் பார்த்து செயல்படுவார் என கூறியுள்ளார்.

சஞ்சய் தோபலின் பயிற்சியாளர் தாரக் சின்ஹா, கூறும்போது, உள்ளூர் கிரிக்கெட் மட்டத்தில் தோபல் ஒரு டீசண்ட் வீரர். எனக்கு நம்பிக்கை அளிக்கும் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்தார் அவர், பதின்ம வயதில் என்னிடம் பயிற்சிக்கு வந்தார், நல்ல திறமைகளை வெளிப்படுத்தினார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்