2007 டி20 உலகக்கோப்பை தொடரில் சச்சின், கங்குலி, டிராவிட் விளையாடததற்கு காரணம் இதுவே! தெரியவந்த ரகசியம்

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற முதல் டி20 உலகக்கோப்பை தொடரில், சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர் விளையாடாததற்கு என்ன காரணம் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

டோனி தலைமையில், இளம் இந்திய அணி, கடந்த 2007-ஆம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டி20 தொடரை வென்று சாதனை படைத்தது.

இந்த தொடரில், இந்திய சீனியர் வீரர்களான சேவாக், கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற பலரும் ஆடவில்லை. பந்துவீச்சிலும் அணில் கும்ப்ளே போன்றோர் விளையாடவில்லை.

இளைஞர்களுக்கு வழி விடும் நோக்கில் அவர்கள் விலகிக் கொண்டனர்.

இந்நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் இந்த சீனியர் வீரர்கள் எல்லாம் ஆடாததற்கு காரணம் யார் என்று முன்னாள் இந்திய அணியின் மேலாளர் லால் சந்த் ராஜ்புட் கூறுகையில், டி20 உலக கோப்பை தொடரில் நாமெல்லாம் ஆட வேண்டாம் என்று சச்சின் மற்றும் கங்குலியிடம் ராகுல் டிராவிட் கூறினார்.

இதை அவர்களும் ஒப்புக்கொண்டனர். இங்கிலாந்து தொடரை முடித்து விட்டு நேராக ராகுல் டிராவிட் தலைமையிலான அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட்டது.

மேலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக மூவரும் முடிவு செய்தனர்.

சச்சின், டிராவிட், கங்குலி ஆகியோர் உலக கோப்பை தொடரில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தனர் .இந்திய அணி கோப்பையை வென்று விட்டது என்று அவர் தெரிவித்துள்ளார்.

2007-ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில்டிராவிட் தலைமையிலான அணி தோற்று இருந்தது.

மேலும் வங்கதேசத்துக்கு வங்கதேச அணிக்கு எதிராக லீக் தொடரை தோற்று விட்டு வெளியே வந்தது. இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் இந்த தொடரிலும் மூவரும் கலந்து கொண்டால் மிகப்பெரிய எதிர்ப்பை சந்திக்க நேரிடும் என்று முடிவு செய்து இருவரும் விலகி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.



மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்