டோனியின் அறைக்கு அடிக்கடி செல்லும் வீரர் இவர் தான்! இந்திய வீரர் சொன்ன தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா டோனி குறித்தும், அவருடைய அறைக்கு அடிக்கடி செல்லும் வீரர் குறித்தும் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி எந்த ஒரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.

நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில் சிறப்பான விளையாட்டை கொடுத்து, டோனி மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதுவும் இந்த கொரோனா காரணமாக நடைபெறவில்லை. இதனால் டோனி எப்போது வேண்டும் என்றாலும் ஒய்வை அறிவிக்கலாம் என்ற தகவலும் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் டோனியைப் பற்றி பலரும் இந்த ஊரடங்கு காலத்தில் பகிர்ந்து வருவதால், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா டோனி பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், துவக்கத்தில் டோனியுடன் குறைவாகவே பேசி வந்தேன். ஆனால் 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருடன் சகஜமாக பேசத் துவங்கினேன். அவரைப் பற்றி நிறைய புரிந்து கொண்டேன்.

டோனி எவ்வாறு இளம் வீரர்களுடன் நடந்து கொள்கிறார் அவர் எவ்வளவு கனிவானவர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

இளம் வீரர்களுடன் நல்லவிதமாகப் பேசி அவர்களை நன்றாக டோனி வழிநடத்துவதில் சிறந்தவர். அதே நேரத்தில் களத்திலும் அவர் அதே போலவே நடந்து கொள்வார்.

அவர் தன் அறைக்கு யாரும் வரக்கூடாது என எப்போதுமே சொன்னது கிடையாது யார் வேண்டுமானாலும் டோனியின் அறைக்கு செல்லலாம்.

இது பற்றி நீங்கள் ஷமி இடம் கேட்டால் உங்களுக்கு நன்றாக தெரியும். ஏனெனில் டோனியின் அறைக்கு அடிக்கடி செல்லும் நபர் ஷமிதான். டோனியிடம் இருந்து கிரிக்கெட் மற்றும் வாழ்க்கை குறித்து நிறைய கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்