கொரோனா நிவாரண உதவிக்கு அள்ளிக் கொடுத்த பிரபல நடிகர்! குவியும் பாராட்டு

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் கொரோனா பரவி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், நடிகர்கள் செய்து வரும் உதவி குறித்து சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியாவில் 673,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19,279 பேர் உயிரிழந்துள்ளனர். சமீபநாட்களாக நாட்டில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அதுமட்டுமின்றி, இந்த கொரோனா வைரஸ் புலம்பெயர் தொழிலாளர்கள் பலரும் அவர்கள் வேலை பார்த்து வந்த மாநிலங்களில் சிக்கிக் கொண்டனர்.

இதனால் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர்களை சொந்த ஊர்களுக்குத் திருப்பி அனுப்புவதில் ஹிந்தி நடிகர் சோனு சூட் மிகவும் தீவிரமாகப் பணியாற்றினார்.

மும்பையில் தங்கியிருந்த பலரையும் தனது சொந்த செலவில் பேருந்துகளில், ரயில்களில், ஏன் சிலரை விமானத்தில் கூட அனுப்பி வைத்திருக்கிறார்.

எந்த முன்னணி ஹீரோக்களும் செய்யாத ஒரு விஷயத்தை வில்லன் நடிகரான சோனு சூட் செய்து மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றார்.

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஹியூமன் பிரான்ட்ஸ் என்ற அமைப்பு கொரானோ நிவாரண உதவியில் எந்த பிரபலம் அதிகமாக உதவி வருகிறார் என்பது குறித்து ஒரு ஆய்வை நடத்தியுள்ளது.

அதில் 78.5 சதவீத கார்ப்பரேட் ரேட்டிங் பெற்றும், 86.4 சதவீத பொதுமக்கள் ரேட்டிங் பெற்றும் சோனு சூட் முதலிடம் பெற்றுள்ளார்.

25 கோடிக்கும் மேல் நிவாரண உதவிகளை வழங்கிய அக்ஷய்குமார் 68.4 சதவீத கார்ப்பரேட் ரேட்டிங், 78.7 சதவீத பொதுமக்கள் ரேட்டிங் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

அமிதாப்பச்சன், ஆயுஷ்மான் குரானோ மூன்றாவது, நான்காவது இடங்களிலும், நடிகை டாப்சி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்