இது நடந்தால் தான் திருமணம் செய்து கொள்வேன்! கிண்டலுக்கு ஆளாகியுள்ள பிரபல இளம் வீரர் ரஷித் கான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்ற பிறகே தன்னுடைய திருமணம் நடைபெறுமென்று அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் மிகவும் முக்கியமான வீரராக இருப்பவர் ரஷித் கான். தன்னுடைய 18வது வயதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து 3 வருடங்களில் கேப்டன் பொறுப்பு வரை சென்றுவிட்டார்.

அந்த அளவில் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 133 விக்கெட்டையும், 48 டி20 போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டையும் எடுத்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். தற்போது அவருக்கு 21 வயது தான் ஆகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி உலகக்கோப்பை வென்ற பிறகே தன்னுடைய திருமணம் நடைபெறுமென்று ரஷித் கான் தெரிவித்துள்ளார்.

ரேடியோ ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தனது திருமண திட்டம் குறித்து அதிர்ச்சி கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவருடைய இந்த திருமணம் குறித்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிவிட்டது பலரும் கிண்டல் செய்து பதிவிட்டு வருகின்றனர்.

திருமணத்தில் இருந்து எஸ்கேப் ஆகவே இப்படி அவர் சொல்கிறார் என சிலர் பதிவிட்டுள்ளனர். சிலர் அவரது வயதான தோற்றமுள்ள படத்தை பதிவிட்டு இன்னும் திருமணத்திற்காக ரஷித் காத்திருக்கிறார் என்று கிண்டலடித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்