இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலே துவம்சம் செய்த மேற்கிந்திய தீவு! பாராட்டி தள்ளிய இந்திய வீரர் கோஹ்லி

Report Print Santhan in கிரிக்கெட்
361Shares

இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவு அணி வெற்றி பெற்றதால், இந்திய அணியின் தலைவர் கோஹ்லி அந்தணியை பாராட்டியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளில் விளையாட்டு போட்டிகள் நடப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பார்வையாளர்கள் இல்லாமல் நடத்த அனுமதி உள்ளது. இதையடுத்து இங்கிலாந்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட, மேற்கிந்திய தீவு அணி, அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

(Reuters)

இதில் இரு அணிகளுக்கிடையே கடந்த 8-ஆம் திகதி துவங்கிய முதல் டெஸ்ட் போட்டி உலக கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிக கவனத்தை பெற்றது. ஏனெனில் கொரோனாவிற்கிடையே இந்த போட்டி நடப்பதால், பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி எப்படி இருக்கும் என்ற எதிபார்ப்பு நிலவியது.

ஆனால், அதற்கு எல்லாம் பஞ்சம் இல்லாதது போல், முதல் டெஸ்ட் போட்டி அனல் பறந்தது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலே மேற்கிந்திய தீவு அணி வீழ்த்தியது.

இதனால் மேற்கிந்திய தீவு அணிக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான கோஹ்லி, வாவ் என்ன ஒரு அற்புதமான, அழகான ஒரு டெஸ்ட் போட்டி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போன்று இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரும், மேற்கிந்திய தீவு அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமான பிளாக் ஹோல்டர்(95)-ன் ஆட்டத்தை பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்