காதலியை பார்க்க ஓடிய இங்கிலாந்து வீரர்... ஏன் வீரர்களுக்கு பஸ் இல்லையா? வெளுத்து வாங்கிய மேற்கிந்திய தீவு ஜாம்பவான்

Report Print Santhan in கிரிக்கெட்
375Shares

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் விதிமுறைகளை மீறி காதலியை பார்கக போன விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேற்கிந்திய தீவு அணியின் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் இங்கிலாந்து அணி நிர்வாகத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.

இங்கிலாந்து, மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில், இந்த தொடர் பல்வேறு பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து அரசிடம் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பு இதற்காக சிறப்பு அனுமதி வாங்கி உள்ளது. கடும் விதிமுறைகளை பின்பற்ற இருப்பதாக கூறியே அனுமதி வாங்கப்பட்டுள்ளது.

இரு அணிகளும் அந்த விதிமுறைகளை பின்பற்றியே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், 2-வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து வீரர்கள் தங்கள் கார்களில் மான்செஸ்டர் நகருக்கு தனித்தனியே பயணம் செய்தனர்.

© Getty

அதில் ஜோப்ரா ஆர்ச்சர் மட்டும் நடுவே 120 மைல் தள்ளி உள்ள தன் வீட்டுக்கு சென்று காதலியை பார்த்து விட்டு வந்தார்.

இந்த தகவல் இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்க சில மணி நேரங்களுக்கு முன்பே இங்கிலாந்து அணி நிர்வாகத்துக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை அணியில் இருந்து நீக்கிய நிர்வாகம், அவரை ஐந்து நாள் தனிமையில் வைத்துள்ளது.

ஜோப்ரா ஆர்ச்சர் இந்த தவறை செய்ய காரணமே, இங்கிலாந்து வீரர்கள் தனித்தனியே கார்களில் மான்செஸ்டர் செல்ல வேண்டும் என்ற இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பின் திட்டம் தான்.

Pic/Getty Images

இங்கிலாந்து வீரர்களை ஒன்று அல்லது இரண்டு பேருந்துகளில் எளிதாக அழைத்துச் சென்று இருக்க முடியும் என்று விளாசியிருக்கிறார் மேற்கிந்திய தீவு அணியின் முன்னாள் ஜாம்பவானான மைக்கேல் ஹோல்டிங்.

அவர், நான் இங்கிலாந்து கிரிக்கெட் அமைப்பை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். இந்த விதிமுறைகள் இருக்க வேண்டும் தான்.

ஆனால், அதில் கொஞ்சம் லாஜிக் இருக்க வேண்டும். இங்கிலாந்து அணி ஏன் ஒரு பேருந்தில் சென்று இருக்கக் கூடாது?

அவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் பரிசோதனையை முடித்து விட்ட நிலையில், ஆறு போட்டிகளுக்கு ஒன்றாக ஆட வேண்டும் என்ற நிலையில், அவர்கள் அனைவரும் ஒன்றாக ஏன் பேருந்தில் சென்று இருக்கக் கூடாது? அவர்கள் காரில் செல்ல எப்படி அனுமதிக்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்