ஐபிஎல் தொடர் நடப்பது உறுதி! செப்டம்பர் 19-ல் துவங்குகிறது: உச்சகட்ட மகிழ்ச்சியில் கிரிக்கெட் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் திகதி துவங்கி நவம்பர் 8-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. அதே போன்று இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர், செப்டம்பர் 19-ஆம் திகதி துவங்கி நவம்பர் 8-ஆம் திகதி முடிவடையும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதி விவரங்கள் குறித்து ஆலோசிப்பதற்கும், அட்டவணையை அங்கீகரிப்பதற்கும் ஐபிஎல் ஆட்சிக்குழு அடுத்த வாரம் கூடுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்