இந்த ஆண்டு ஐபிஎல்லில் முதல் போட்டியே அனல் பறக்க போகுது... ஏன் தெரியுமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதவுள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

கடந்த மார் மாதம் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர், கொரோனா வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்தியாவில் தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், ஐபிஎல் நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி குறி எழுந்த நிலையில், கொரோனா குறைந்து வரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடக்கும் என்று கூறப்பட்டது.

இத்தொடர் செப்டம்பர் 19-ஆம் திகதி துவங்கி நவம்பர் 8-ஆம் திகதி வரை நடைபெறும்

போட்டி எங்கு நடக்கும் ? எப்போது நடக்கும் ? வீரர்களை எப்படி பாதுகாப்பது ? போட்டிகளுக்கான அட்டவணை குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இந்ததொடரின் முதல் போட்டியாக சென்ற ஆண்டு இறுதிப்போட்டியில் ஆடிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கும் இடையேதான் நடைபெறப்போகிறது.

இந்த முதல் போட்டியே ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையவுள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்கு பிறகு டோனி விளையாட இருக்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்