200 டெஸ்ட் விக்கெட்டுகள்... இன்னமும் தொட முடியாத இரு நாடுகளின் வேகப்பந்து வீச்சாளர்கள்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

மேற்கிந்தியத் தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் கெமர் ரோச் 200-வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றியதை அடுத்து, கடந்த 20 ஆண்டுகளில் இந்த பட்டியலில் இடம்பெறாத இரு நாடுகளின் வேகப்பந்து பந்துவீச்சாளர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

1994-ல் மேற்கிந்தியத் தீவுகளின் அம்ப்ரோஸ் தமது 200-வது டெஸ்ட் விக்கெட்டை கைப்பற்றினார்.

இதன்பிறகு இந்த இலக்கை எட்ட அடுத்த மேற்கிந்தியத் தீவுகளின் பந்துவீச்சாளருக்கு 26 வருடங்கள் ஆகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 1 ஓட்டங்களில் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார் கெமர் ரோச்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட்டை அவர் அடைந்தார். இந்த உயரத்தை எட்டியுள்ள 9-வது மேற்கிந்தியத் தீவுகளின் வீரர் என்கிற பெருமையை அவர் எட்டியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 வருடங்களில் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வேகப்பந்து பந்துவீச்சாளர்களால் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் என்கிற கடினமான இலக்கை அடைய முடியாமல் உள்ளது.

கடந்த 2000 ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட் ஆடிவரும் வங்கதேச டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இது பெரிய சவால் தான்.

ஆனால் வேகப்பந்துவீச்சுக்குப் பிரபலமான பாகிஸ்தானாலும் இந்தப் பெருமையை அடைய முடியாமல் போனது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்