பென் ஸ்டோக்சுக்கு நிகராக எந்த வீரரும் இந்தியாவில் இல்லை - கவுதம் கம்பீர்

Report Print Kavitha in கிரிக்கெட்

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ்க்கு நிகராக ஒப்பிடக்கூடிய அளவுக்கு இப்போது எந்த வீரரும் இந்தியாவில் இல்லை என்று கவுதம் கம்பீர் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இவர் கூறுவதாவது, டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் விளையாடும் விதத்தை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே எந்த வீரரும் அவருக்கு நிகரில்லை.

பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டராக சிறப்பாக விளையாடி வருகிறார். இவரை போன்ற வீரர் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கேப்டனின் கனவாக இருக்கும்.

மேலும் நிறைய வீரர்கள் அவரை போன்று விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலக கிரிக்கெட் அரங்கில் இப்போது யாரும் இல்லை என்று கம்பீர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்