20 பேர் கொண்ட அணியை அறிவித்தது பாகிஸ்தான்...ஆகஸ்ட் 5-ல் முதல் டெஸ்ட் தொடக்கம்

Report Print Kavitha in கிரிக்கெட்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதற்காக கடந்த மாதம் 28-ந்தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றடைந்தது.

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர்களுடன் டி20 அணிக்கான 9 வீரர்கள் உள்ளனர். இவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறமாட்டார்கள். ஆனால் பயிற்சி மேற்கொள்வார்கள்.

மேலும் 2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதியும் டி20 போட்டிகள் ஆகஸ்ட் 28-ந்தேதி, 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகள் நடக்கவிருக்கின்றது. என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்

 • அசார் அலி (கேப்டன்)
 • பாபர் அசாம் (துணைக் கேப்டன்)
 • அபித் அலி
 • ஆசாத் ஷபிக்
 • பஹீம் அஷ்ரஃப்
 • பவத் அலாம்
 • இமாம் உல் ஹக்
 • இம்ரான் கான்
 • காஷிஃப் பாத்தி
 • முகமது அப்பாஸ்
 • முகமது ரிஸ்வான்
 • நசீம் ஷா
 • சர்பராஸ் அகமது
 • ஷதாப் கான்
 • ஷாஹீன் ஷா அப்ரிடி
 • ஷான் மசூட்
 • சோஹைல் கான்
 • உஸ்மான் ஷின்வாரி
 • வஹாப் ரியாஸ்
 • யாசீர் ஷா

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்