இலங்கை கிரிக்கெட் துணைத் தலைவர் திடீர் ராஜினாமா

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர் கே.மதிவனன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கே.மதிவனன் தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் செயலாளர் மோகன் டி சில்வாவுக்கு அனுப்பியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியத்துடன் பல மாத அதிருப்தியைத் தொடர்ந்து மதிவாணன் இன்று காலை அவர் தனது ராஜினாமாவை வழங்கினார்.

மதிவாணன் 2016 முதல் இலங்கை கிரிக்கெட்டின் துணைத் தலைவர் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உடனடியாக பதவி விலகுவதாக கூறிய மதிவாணன், திடீர் முடிவுக்கு எந்த காரணங்களையும் குறிப்பிடவில்லை.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் மதிவாணன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்