இந்திய அணியின் இளம் வீரர் ஹார்திக் பாண்ட்யாவுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவரான ஹார்திக் பாண்ட்யா தனக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் செர்பியா நடிகை நடாஷா ஸ்டான்கோவிச்சை காதலித்து வந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் புத்தாண்டையொட்டி வெளிநாட்டில் நடுக்கடலில் வைத்து மோதிரம் மாற்றிக்கொண்டு காதலை வெளிப்படுத்தினர்.

அதன்பின் ஊரடங்கு காலத்தில் அவர்களது திருமணம் எளிமையாக நடைபெற்றது. இவர்களின் திருமண புகைப்படம் வெளியானபோதுதான் வெளி உலகத்திற்கு திருமணம் ஆனதே தெரியவந்தது.'

View this post on Instagram

We are blessed with our baby boy ❤️🙏🏾

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

கடந்த ஒருமாதமாக தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் படத்தை சமூக வலைத்தளங்களில் ஹர்திக் பாண்ட்யா வெளியிட்டு வந்த நிலையில், நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் ஆண் குழந்தை பிறந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்