ஐபிஎல் போட்டிக்கு தயாராகும் கோஹ்லி அன் கோ

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

ஐபிஎல் 2020 போட்டிகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது கோஹ்லி தலைமையிலான பெங்களூரு றொயல் சேலஞ்சர்ஸ்.

செப்டம்பர் 19ல் தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் நவம்பர் 8ம் திகதி வரை யூஏஇயில் நடைபெறுகிறது.

இதற்கான போட்டி அட்டவணைகள் குறித்து ஐபிஎல் நிர்வாக இன்று இறுதி முடிவை முடிவெடுக்கவுள்ளது.

வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ஐபிஎல்லின் அணிகள் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன. இதையொட்டி அணிகள் அனைத்தும் தங்களை தயார் படுத்தி வருகின்றன.

இந்நிலையில், தன்னுடைய அணியின் பயணத்தையொட்டி முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.

இதற்கு முன்னோட்டமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்