ஐபிஎல் 2020-க்கு அனுமதி அளித்த அரசு! போட்டி நடைபெறும் திகதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு: மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ஆம் திகதி வரை தொடர் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.

அதன் படி, செப்டம்பர் 19-ஆம் திகதி முதல் நவம்பர் 10-ஆம் திகதி வரை நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.

ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஐபிஎல் ஆட்சி மன்றக் குழுவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்து விட்டதாகவும், போட்டி செப்டம்பர் 19-ஆம் திகதி துவங்கி நவம்பர் 10-ஆம் திகதி வரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் 26-ஆம் திகதி இந்திய வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்படுவார்கள், போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்