என் மனைவி மற்றும் மகளின் மீதான அக்கறை! ஐபிஎல் போட்டி தொடங்கும் நிலையில் மனம் திறந்த இந்திய அணி வீரர்

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில் குடும்பத்தாரின் பாதுகாப்பு தான் முக்கியம் என இந்திய அணியை சேர்ந்த டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் ரஹானே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவந்த ரஹானே, தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக யூஏஇயில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 8ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக ஐபிஎல்லின் 8 அணிகளும் வரும் 15ம் திகதி யூஏஇக்கு பயணம் மேற்கொள்ள உள்ளன. ஆனால் பாதுகாப்பு நடைமுறைகளை கருத்தில் கொண்டு குடும்பதினர் உடன் செல்ல அனுமதி மறுக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் குடும்பத்தினரின் பாதுகாப்பு தான் முக்கியமானது என்றும் இந்த சூழ்நிலையில் யூஏஇக்கு குடும்பத்தினரை உடன் அழைத்து செல்ல பிசிசிஐ அனுமதி மறுத்தாலும் அதுகுறித்து கவலை இல்லை என்று அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

தன்னுடைய மனைவி மற்றும் மகளின் பாதுகாப்பு குறித்து தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 5 மாதங்களாக நேரம் செலவழிப்பு கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் இந்த சூழலில் உடன் விளையாடும் வீரர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்றும் ரஹானே கூறியுள்ளார்

கடந்த 4 -5 மாதங்களாக குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்த நிலையில், தற்போது அவர்களை பிரிந்து செல்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்