இலங்கையில் நடைபெறவுள்ள பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஆசைப்படும் இந்திய முன்னாள் வீரர்!

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை பிரீமியர் லீக் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பில் முதலாவது லங்கா பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ஆம் திகதி முதல் செப்டம்பர் 20-ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதில் கொழும்பு, கண்டி, காலே, டம்புல்லா, ஜாப்னா ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்ட 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த அணிகளில் இலங்கையை சேர்ந்த முன்னணி வீரர்களுடன், வெளிநாட்டு வீரர்களும் இடம் பெறுகிறார்கள்.

இந்நிலையில் இந்த தொடரில் விளையாட விருப்பம் இருப்பதாக கூறி, கடந்த ஜனவரி மாதத்தில் கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்ற இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்பான் பதான், நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் உள்பட 70 வெளிநாட்டு வீரர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்