என் வாழ்க்கையிலேயே இத்தனை நாள் இப்படி இருந்ததில்லை: ரோகித் சர்மா ஆதங்கம்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

என் கிரிக்கெட் வாழ்க்கையில் இத்தனை நாள்கள் மட்டையை தொடாமல் இருந்ததில்லை என்று இந்திய அணியின் துணை அணித்தலைவர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த ரோகித் சர்மா, நான் கிரிக்கெட் விளையாட தொடங்கி இத்தனை நாள்கள் மட்டையை தொடாமல் இருந்ததில்லை.

இப்போது மீண்டும் தொடங்கும்போது சவாலானதாகவே இருக்கும். விளையாடும் வரை என்னுடைய உடம்பு எந்த அளவுக்கு தகுதியாக இருக்கிறது என்பதை என்னால் தெரிந்துக்கொள்ள முடியாது.

ஆனால் இந்த 4 மாதங்களாக உடல்ரீதியாக உறுதியாகவே இருக்கிறேன் என்றார். மேலும் தொடர்ந்த அவர் ஐபிஎல் தொடங்குவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது.

இப்போதைக்கு எந்த அவசரமும் இல்லை. நான் பயிற்சியை மைதானத்துக்கு சென்று ஈடுபட இருக்கிறேன்.

அப்போதுதான் துபாயின் 40 டிகிரி வெயிலுக்கு விளையாட பழகிக்கொள்ள முடியும். ஆனால் அவ்வளவு சாதாரணமானதல்ல என்கிறார் ரோகித் சர்மா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்