இந்தியாவில் டி20 உலக கிண்ணப் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறும்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

2021ம் ஆண்டு திட்டமிட்டபடி இந்தியாவில் டி20 உலககிண்ணப் போட்டிகள் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கிரிக்கெட் உட்பட எந்தவொரு விளையாட்டு போட்டித் தொடரும் நடைபெறவில்லை.

தற்போதைய சூழலில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் போட்டிகள் நடந்தாலும், இந்தாண்டு நடைபெறுவதாக இருந்த டி20 உலகக் கிண்ணப் போட்டிகள் 2022ம்ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது.

துபாயில் நேற்று நடந்த ஐசிசி பொதுக்குழுவில் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிகிறது.

மேலும் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடத்தப்படும் டி20 உலககிண்ண போட்டியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை.

2020-ம் ஆண்டில் டி20 உலககிண்ணம் எந்த அடிப்படையில் நடத்த முடிவு செய்யப்பட்டதோ, விதிமுறைகள் வகுக்கப்பட்டதோ அதே விதிமுறையில்தான் 2021-ம் ஆண்டில் இந்தியாவில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்