பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்! நியூசிலாந்து செல்லவுள்ளதாக தகவல்

Report Print Basu in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து சட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், அதைத்தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடவுள்ளது.

மான்செஸ்டரில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று 1-0 என முன்னிலைப்பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 13ம் திகதி சவுத்தாம்ப்டனில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மீதமுள்ள பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டியிலிருந்து இங்கிலாந்து நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குடும்ப காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து பென் ஸ்டோக்ஸ் விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த வார இறுதியில் ஸ்டோக்ஸ் நியூசிலாந்து பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான ஸ்டோக்ஸ் இரண்டாவது இன்னிங்ஸில் 9 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். பந்து வீச்சில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்