ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல்... இந்த முறை இந்த அணி தான் கோப்பையை வெல்லும்! அடித்து கூறும் பிரட் லீ

Report Print Santhan in கிரிக்கெட்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரில், இந்த முறை எந்த அணி வெல்லும் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட்லீ கூறியுள்ளார்.

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் தொடர் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. அதன் படி இந்தாண்டு நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர், கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ளது/

இதனால் அணியினர் அனைவரும் கூடிய விரைவில் ஐக்கிய அரபு, அமீரகத்திற்கு சென்று பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரன பிரட்லீ, என்னை பொறுத்தவரையில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் இந்த முறை கோப்பையை வெல்லும் என கருதுகிறேன்.

அனுபவ வீரர்கள் பலர் இருக்கும் சென்னை அணி முழு பலத்துடன் உள்ளது. இளம் வீரர்களும் குறை சொல்ல முடியாத அளவிற்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

அதே போல் சென்னை அணிக்காக தொடர்ந்து நீண்ட காலம் விளையாடி வரும் வீரர்கள் பலர் இருப்பது சென்னை அணியின் மிகப்பெரும் பலம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்