சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமிலிருந்து ரவீந்திர ஐடேஜா விலகல்

Report Print Basu in கிரிக்கெட்
1454Shares

சென்னையில் சிஎஸ்கே ஏற்பாடு செய்த பயிற்சி முகாமிலிருந்து அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரவீர்ந்திர ஐடேஜா விலகியுள்ளார்.

2020 ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 அன்று தொடங்கும் போட்டி நவம்பர் 10 அன்று முடிவடைகிறது.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதற்கு முன்பு அணி வீரர்களுக்காக சிஎஸ்கே அணி சென்னைியல் 5 நாள் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்துள்ளது. டோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் இப்பயிற்சி முகாமில் ஈடுபடவுள்ளனர்.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக சென்னையில் நடைபெறும் பயற்சி முகாமில் கலந்துக்கொள்ள முடியாது என ரவீந்திர ஜடேஜா அணி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்

ஆகஸ்ட் 21ம் திகதி சிஎஸ்கே அணி சென்னையில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு புறப்பட திட்டமிட்டுள்ள நிலையில் அப்போது ஐடேஜாவும் அணியுடன் இணைவார் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்