ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ள நிலையில், வீரர்களின் குடும்பத்தினர் யாரையும் அழைத்து செல்லக் கூடாது என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஐபிஎல் தொடரின் போது, அந்தந்த அணியின் வீரர்களின் மனைவிகள், குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மைதானத்திற்கு வந்து உற்சாகப்படுத்துவர்.
குறிப்பாக டோனியின் மனைவி ஷாக்சி மற்றும் அவரின் மகள், ரோகித் சர்மாவின் மனைவி போன்றோர் ஒவ்வொரு போட்டியிலும் பார்க்க முடியும். அது தொடர்பான வீடியோக்கள் கூட அப்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகும்.
ஆனால், இந்த முறை கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வீரர்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது, உணவு உண்ணக்கூடாது, குளிர்பானம் அருந்தக்கூடாது என அனைத்திலுமே கட்டுப்பாடு உள்ளது.
மேலும் குடும்ப உறுப்பினர்கள் யாரையும் அழைத்து செல்லக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காசி விஸ்வநாதன், குடும்ப உறுப்பினர்கள் தொடரின் முதல் பாதியில் அணியுடன் அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் நிச்சயம் இந்த முறை வீரர்களின் குடும்பத்தினர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வது கடினம் என்றே கூறப்படுகிறது.