டோனி திடீரென்று இப்படி செய்திருக்க கூடாது... ரசிகர்களுக்காகவாது அவர்? பாகிஸ்தான் முன்னாள் வீரர் உருக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்
383Shares

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான் இன்சமாம் உல் ஹக், டோனி இப்படி திடீரென்று ஒய்வு முடிவை அறிவித்திருக்க கூடாது என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி, கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென்று ஓய்வை அறிவித்தார். இதனால் ஒட்டு மொத்த இந்திய ரசிகர்கள்களும் கடைசி போட்டி என்ற ஒன்று கூட விளையாடமால், இப்படி ஓய்வை அறிவித்துவிட்டாரே என்று கூறி வருகின்றனர்

இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக், டோனி பல சாதனைகள் படைத்து விட்டார். அவருக்கு ஒரு போட்டியை எப்படி முடிக்க வேண்டும் என்று தெரியும்.

ஒற்றை ஆளாக காலத்தில் நின்று போட்டியை வெல்ல வைப்பவர். அனைத்து போட்டியிலும் சதம் அடிக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்.

ஆனால் தேவைப்படும்போது தனது பேட்டியை வெளிப்படுத்தி சதம் அடிப்பார் டோனி எவ்வாறு வீரர்களை மேம்படுத்தி அழைத்துச் செல்வது என்று நன்றாக தெரியும்.

ஆட்டத்தின் சூழலை சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்வார். அந்த வீரர்கள் தான் தற்போது மிகச் சிறந்த வீரர்களாக மாறி இருக்கிறார்கள்.

அந்த வகையில் உருவான வீரர்கள்தான் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோர் . அவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

தோனி தனது ஓய்வினை அவர் வீட்டிலிருந்து அறிவித்து இருக்கக்கூடாது. மைதானத்தில் ரசிகர்கள் முன்பு அறிவிக்க வேண்டும் இது போன்று இன்னும் ஒரு சில போட்டிகள் நடத்தி டோனிக்கு மிகப்பெரிய பிரியா விடை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்