டோனி ஓய்வு அறிவித்த அன்று... ஜெர்சியில் கண்ணீர் துளிகள் இருந்தன! ஓய்வு குறித்து கூறிய அஸ்வின்

Report Print Santhan in கிரிக்கெட்
642Shares

இந்திய அணியின் விக்கெட் கீப்பரான டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் டெஸ்ட் போட்டியில் ஓய்வு அறிவித்த அன்று அவரின் ஜெர்சியில் கண்ணீர் துளிகள் இருந்ததாக கூறியுள்ளார்.

இந்திய அணிக்கு மூன்று வித கோப்பைகளை வென்று கொடுத்த வீரர் என்ற சாதனை படைத்தவர் டோனி. இவர் தலைமையிலான இந்திய அணி பல சாதனைகளை படைத்துள்ளது.

ஆனால், கடந்த சில வருடங்களாக டோனி மோசமாக பார்ம் காரணமாக தவித்து வந்தார். அதுமட்டுமின்றி இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடரிலும் அந்தளவிற்கு அவர் ஆட்டம் இல்லை.

அதன் பின் டோனியையும் சர்வதேச போட்டியில் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு டோனி திடீரென்று ஓய்வை அறிவித்தார்.

டோனியின் ஓய்வுக்கு பின் ஒரு அரசியல் காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின், எனக்கு நன்றாக நியாபகம் இருக்கிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு மெல்போர்னில் நடைபெற்ற ஆட்டத்தில் அணியை வெற்றிப் பெற செய்வதற்காக நாங்கள் இருவரும் களத்தில் போராடிக்கொண்டிருந்தோம்.

ஆனால் இறுதியில் அந்தப் போட்டியில் நாங்கள் தோல்வியைத் தழுவினோம். அப்போது அவர் ஸ்டெம்பை பிடுங்கிக் கொண்டு முடிந்துவிட்டது என்று கூறி அமைதியாக நடந்தார். அவருக்கு அது மிகவும் நெகிழ்ச்சிகரமான தருணமாக இருந்தது.

மாலை வேளையில் அவருடன் நான், இஷாந்த் ஷர்மா, சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோர் இருந்தோம். அவர் போட்டிக்காக அணிந்திருந்த ஜெர்ஸியை கழட்டவே இல்லை. அன்றைய இரவு முழுவதும் அவர் அந்த ஜெர்ஸியை அணிந்திருந்தார். அதில் சில துளி கண்ணீரும் இருந்தது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்