கொஞ்சம் இதை கண்டுபிடித்து தாருங்கள்..! ரசிகர்களிடம் உதவி கோரிய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின்

Report Print Basu in கிரிக்கெட்
407Shares

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முதல் காரை கண்டுபிடிக்க உதவுமாறு தனது ரசிகர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெண்டுல்கர் 2013ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார், ஆனால் தற்போதும் இந்தியாவில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக திகழ்கிறார்.

இந்நிலையில், இணையதள உரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட சச்சின் டெண்டுல்கர், தனது முதல் காரை கண்டுபிடிக்க உதவுமாறு கோட்டுக்கொண்டுள்ளார்.

அவரின் முதல் கார் மாருதி 800 என தெரிவித்துள்ளார். இது 1990 களில் இந்தியர்களிடையே பிரபலமான ஒரு சிறிய கார் என்று கூறினார்.

கார் குறித்து இன்னும் விரிவான தகவலை சச்சின் வழங்கவில்லை. எனினும், கார் இருக்கும் இடம் தெரிந்தால் தன்னை தொடர்பு கொள்ளும்படி தனது ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார்.

அவர் கிரிக்கெட் வீரரான பிறகு தனது முதல் காரை வாங்கியதாக கூறினார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் தனது அந்தஸ்து உயர்ந்தவுடன் பல புதிய கார்களை வாங்கிய பின்னர் மாருதி 800 காரை விற்றதாக சச்சின் கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்