இந்த ஐ.பி.எல் தொடரில் அஸ்வினை அப்படி நடந்துகொள்ள விடமாட்டேன்: ரிக்கி பாண்டிங்

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
423Shares

இந்த ஐ.பி.எல் தொடரில் மன்கட் முறையில் துடுப்பாட்ட வீரர்களை வெளியேற்ற அஸ்வினை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

2020 ஐ.பி.எல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின்.

அடுத்த சில நாட்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடரில் மன்கட் முறையை பயன்படுத்த அஸ்வினை அனுமதிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் நான்-ஸ்ட்ரைக்கராக இருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பட்லரை அஷ்வின் மன்கட் முறையில் பந்து வீசுவதற்கு முன்பே அவுட் செய்திருந்தார்.

அந்த அவுட் கிரிக்கெட் உலகில் பலத்த விவாதத்தை ஏற்படுத்தி இருந்தது. அது கிரிக்கெட்டின் கேம் ஸ்பிரிட்டை குலைக்கிறது.

அதனால் அஸ்வினிடம் இது குறித்து சொல்வேன் என பத்திரிகை நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் பாண்டிங்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்