ஒரேயொரு தவறு... ஒட்டுமொத்த அணியும் குளோஸ்: எச்சரிக்கும் விராட் கோஹ்லி

Report Print Arbin Arbin in கிரிக்கெட்
287Shares

நாம் ஒருவர் செய்யும் தவறால் நம்முடைய ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று விராட் கோஹ்லி அணி வீரர்களை எச்சரித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றடைந்துள்ள 8 அணி வீரர்களும் தங்கள் ஹொட்டல்களிலும் ரிசார்ட்டுகளிலும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

எதிர்வரும் 28 முதல் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்பு கடுமையான நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் அனைவரும் அணியிருனடன் நேற்று இணைந்தனர்.

அப்போது அணித் தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அணியின் இயக்குனர் மைக் ஹெசன் ஆகியோர் நெறிமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வீரர்களிடம் எடுத்துரைத்தனர்.

அப்போது பேசிய கோஹ்லி, யாராவது ஒருவர் விதிகளை மீறினால், அது முழு அணியையும் வீழ்த்துவதாகும்.

என்னென்ன கட்டுப்பாடுகள் இருக்கிறதோ அது அனைத்தையும் நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பாதுகாப்பு வளையம் என்பதில் நாம் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

ஏனென்றால், நாம் ஒருவர் செய்யும் தவறால் நம்முடைய ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் கூட இதை விரும்பக்கூடாது என்றார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்