இந்த ஐபிஎல் தொடரில் டோனி பயன்படுத்த போகும் 3 பேட்கள் இவை தான்! என்ன காரணம் தெரியுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
160Shares

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், டோனி பயன்படுத்த போகும் 3 பேட்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடவுள்ள டோனி BAS, SS, Vampire ஆகிய மூன்று ரக பேட்டுகளை பயன்படுத்தி உள்ளார்.

அதற்கு காரணம் டோனி தனது இளம் கிரிக்கெட்டில் முறையான கிரிக்கெட் ஸ்பான்சர் இல்லாமல் தவித்த போது அவருக்கு முதல் முதலில் உதவியர் தான் ஸ்பான்சர் சோமி கோலி.

டோனியின் நண்பரான பரம்ஜீத் சிங் மூலம் டோனிக்கு அறிமுகமானவர் சோமி கோலி. பரம்ஜீத் சிங்கின் தொடர் வற்புறுத்தலுக்கு பிறகு 6 மாதங்கள் யோசித்து முதல் கிரிக்கெட் கிட்டை டோனிக்கு ஸ்பான்சர் செய்தவர் இவர்தான்.

ஆரம்ப கட்டத்தில் அவர் கொடுத்த கிரிக்கெட் உபகரணங்களை வைத்தே டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார்.

அதன் பின்னர் கிரிக்கெட்டின் உச்சத்தை அடைந்த டோனி பல்வேறு உயரங்களை தொட்டார். அதன்பிறகு டோனி பயன்படுத்திய கிரிக்கெட் லேபிளுக்கு கூட பலகோடி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தனது கிரிக்கெட்டின் கடைசி காலகட்டத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் எந்த கட்டணமும் இன்றி தான் ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய அந்நிறுவனங்களின் கிரிக்கெட் உபகரணங்களை டோனி பயன்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்