இலங்கையின் லங்கன் பிரீமியர் லீக்கில் இந்தியாவின் ஐபிஎல், பாகிஸ்தானின் பிஎஸ்எல் அணிகள் விளையாடவுள்ளன! கசிந்த தகவல்

Report Print Basu in கிரிக்கெட்
222Shares

இலங்கையின் உள்நாட்டு டி-20 தொடரான லங்கன் பிரீமியர் லீக்கில் (எல்பிஎல்) புகழ்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்), கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) மற்றும் கனடா ஜிடி 20 லீக் போன்ற தொடர்களில் விளையாடும் அணிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நடைபெறவிருக்கும் டி-20 லீக்கில் முன்னாள் பிஎஸ்எல் சாம்பியன் அணி விளையாடவுள்ளது என்பதை எல்பிஎல் ஏற்பாடு அமைப்பு குழுவில் இருக்கும் நம்பதகுந்த வட்டாரம் வெளிப்படுத்தியுள்ளது.

சில நாட்களில் கூடுதல் விவரங்கள் வெளிவரும், இருப்பினும் முன்னாள் பிஎஸ்எல் சாம்பியன் அணி லங்கா பிரீமியர் லீக்கின் ஒரு பகுதியாக இருக்க ஒப்புக் கொண்டுள்ளது என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் முதல் வாரத்திற்குள் எல்.பி.எல் தொடரில் விளையாடும் ஐபிஎல் அணியின் விவரம் வெளியாகும், அத்துடன் சிபிஎல் மற்றும் ஜிடி20 கனடா ஆகிய தொடர்களில் விளையாடும் தலா ஒரு அணியின் விவரமும் வெளியாகும் என தெரிவித்துள்ளது.

லங்கன் பிரீமியர் லீக்கின் புதிய திகதிகள் நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடக்கும் என இலங்கை கிரிக்கெட் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது.

அதே காலப்பகுதியில் மீதமுள்ள பிஎஸ்எல் போட்டிகளை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தால், எல்பிஎல்-லின் அட்டவணை மாற்றப்படும் என்று அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்