ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைக்காக செய்யப்படும் செலவு மட்டும் எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்காக கொரோனா பரிசோதனைக்கு பிசிசிஐ செலவு செய்யும் தொகை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ம் திகதி முதல் நவம்பர் 10-ம் திகதி வரை ஐபிஎல் தொடர் நடத்தப்பட இருக்கிறது.

இதற்காக நட்சத்திர ஹொட்டல்களில் தங்கியுள்ள 8 அணி வீரர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு, கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

ஆகஸ்டு 20ம் திகதியில் இருந்து ஐபிஎல் போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை பிசிசிஐ நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கொரோனா பரிசோதனைகளுக்கு மட்டும் 10 கோடி ரூபாயை செலவு செய்ய இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்