சவுதம்டனில் இன்று இங்கிலாந்து- அவுஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இவ்விரு அணிகளும் பலம் வாய்ந்த அணியாக இருப்பதால் இப்போட்டிக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
இப்போட்டி குறித்து அவுஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் ,‘இங்கிலாந்து அபாயகரமான அணியாகும்.
அந்த அணியின் கேப்டன் மோர்கன் களம் இறங்கி முதல் பந்தில் இருந்தே விளாசுவதை பார்க்கவே திகைப்பாக இருக்கும். அவர்களின் சவாலை சமாளிக்க தயாராக இருக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி இதுவரை இவ்விரு அணிகளும் 16 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் அவுஸ்திரேலியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்வுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.