சென்னை அணிக்கு மற்றொரு பெரிய அடி! 2020 ஐபிஎல் தொடரிலிருந்து மேலும் ஒரு சிஎஸ்கே நட்சத்திர வீரர் விலகல்?

Report Print Basu in கிரிக்கெட்
302Shares

சுரேஷ் ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலககுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

2020 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், துபாய் சென்றடைந்த சென்னை அணி குழுவில் சிலருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக 2020 தொடரிலிருந்து விலகி நாடு திரும்பினார். நாளடைவில் குடும்ப சூழ்நிலை காரணமாக விலகியதாக ரெய்னா விளக்கமளித்தார்.

இந்நிலையில், தற்போது சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் 2020 ஐபிஎல் தொடரிலிந்து விலககுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுவதாக அவர் அணி நிர்வாகத்திடம் விளக்கமளித்துள்ளார். மேலும் ஒரு வீரர் விலகியுள்ளது சென்னை அணிக்கு மற்றொரு பெரிய அடியாக அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்